search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல். முருகன்
    X
    எல். முருகன்

    அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்வதே பா.ஜனதாவின் நோக்கம்- எல். முருகன் பேட்டி

    பா.ஜனதா சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.

    கோவை, மார்ச்.15-

    பா.ஜனதா மாநில தலைவராக பதவி ஏற்ற எல்.முருகன் முதல் முறை யாக கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கோவை மாவட்ட பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் இந்து இயக்க ங்களை சேர்ந்த ஆனந்த், சூரிய பிரகாஷ் ஆகியோர் பயங்கரவாதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவங்களில் ஒரு சிலரை மட்டுமே போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் இன்னும் கைது செய்யவில்லை. கோவையில் அமைதி நிலவ வேண்டும். பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே பா.ஜனதா எம்.எல்.ஏ,. க்கள், எம்.பி.க்கள் இருந்துள்ளனர்.

    இதே போல வரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட மன்றம், நாடாளுமன்றத்துக்கு பா.ஜனதாவினர் செல்வார்கள். நாங்கள் கட்சியை வளர்க்க தொய்வின்றி சிறப்பாக பணி செய்கிறோம்.பா.ஜனதா சாதி, மதத்திற்கு அப்பாற்ப ட்டது. அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×