search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எஸ்பி வேலுமணி
    X
    அமைச்சர் எஸ்பி வேலுமணி

    பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்: திமுக கேள்விக்கு அமைச்சர் பதில்

    பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி (தி.மு.க.) பேசுகையில் பல்லாவரம் நகராட்சி பகுதியில் 1998-ல் பாதாள சாக்கடை திட்டத்தை சட்டசபையில் கலைஞர் அறிவித்தார். இது 2011-ல் முடிக்கப்பட்டது.

    இப்போது பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை அகலப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை ஈடுபட்டுள்ளது. அந்த பகுதியில் பாதாள சாக்கடைக்கு 2008-ல் போடப்பட்ட ஆர்.சி.சி. பைப்புகள் சாலை விரிவுபடுத்தும் போது உடைந்து பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    உடைந்த பைப்புகளை சரி செய்ய ரூ.30 கோடி தேவை என கணக்கிட்டு அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனவே இதை நிறைவேற்றி தர வேண்டும்.

    பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.211 கோடியில் செயல்படுத்த கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன்.

    இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

    பல்லாவரம் ரேடியல் சாலை அமைப்பதில் பாதாள சாக்கடைக்கு போடப்பட்ட பைப்புகள் 15 ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து உடைந்ததாக கூறினார். துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து குழாய் பழுதடைந்து இருந்ததால் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு செப்பனிடப்படும்.

    பம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலத்தில் கண்டிப்பாக ஆரம்பிக்கப்படும். பல்லாவரம் எம்.எல்.ஏ. பல்வேறு ஒத்துழைப்புகளை தருகிறார். எனவே கண்டிப்பாக கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
    Next Story
    ×