search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் நிலோபர் கபில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.
    X
    அமைச்சர் நிலோபர் கபில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    வாணியம்பாடியில் அமைச்சர் நிலோபர்கபில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வாணியம்பாடியில் உள்ள அமைச்சர் நிலோபர்கபில் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 21 நாட்களாக ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி தலைவர் நாசீர்கான் தலைமையில் குடியுரிமை சட்ட திருத்ததை எதிர்த்து தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் ஆற்றுமேடு பகுதியில் உள்ள கடைகளை அடைத்துவிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்களுடன் சுமார் 50 மாணவர்களும் திடீரென போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அங்கு பேசிய நிர்வாகிகளில் பலர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் வாணியம்பாடியில் உள்ள அமைச்சர் நிலோபர்கபில் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×