search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,472-க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் விலை வரலாறு காணாத அளவுக்கு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் நேற்று ஆபரணத்தங்கம் கிராம் ரூ.4,214-க்கும், பவுன் ரூ.33,712-க்கும் விற்பனையானது. இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,184-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.33,472-க்கும் விற்பனை ஆகிறது.

    வெள்ளி இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.49.90-க்கும், ஒரு கிலோ ரூ.49 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×