search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடை வெயில்
    X
    கோடை வெயில்

    தஞ்சையில் கொளுத்தும் கோடை வெயில்- நிழலை தேடி ஒதுங்கும் பொதுமக்கள்

    தஞ்சையில் கடந்த 1 மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலத்தில் இதைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இனிவரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதனை நிருபிக்கும் வகையில் தஞ்சையில் கடந்த 1 மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலத்தில் இதைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலையில் தொடங்கும் வெயில் மாலை வரை நீடிக்கிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதால் சரியாக தூங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனலாக உள்ளது.

    இதனால் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பகலில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது. இதனால் நடந்து செல்வோர் குடைபிடித்தப்படி செல்வதை காண முடிகிறது. மோட்டார் சைக்கிளில் செல்வோர் முகத்தை துணியால் மூடியபடி செல்கின்றனர். பகல் நேரங்களில் வெயிலோடு அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

    சிலர் வெயிலில் நடந்து செல்லும்போது அசதி காரணமாக மரங்களின் நிழலை நாடி செல்கின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி, பதனீர், வெள்ளரி, கற்றாழை ஜூஸ் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பருகி வருகின்றனர். இதன் காரணமாக தஞ்சையில் பல இடங்களில் சாலையோரங்களில் புதியதாக கடைகள் அமைத்து இளநீர், பழச்சாறு உள்ளிடவவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

    இதேப்போல் குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

    வெயிலை சமாளிக்க தற்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×