search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜுன் சம்பத்
    X
    அர்ஜுன் சம்பத்

    கோவில்களை மத்திய அரசு எடுத்து கொள்வதாக ஸ்டாலின் தவறான அறிக்கை- அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவில்களை மத்திய அரசு எடுத்து கொள்வதாக தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கிருஷ்ணகிரிக்கு நேற்று வந்தார். அங்கு பெங்களூரு சாலையில் உள்ள முனியப்பன் கோவிலில் டெல்லி கலவரத்தில் இறந்த போலீசுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழி பட்டார். 
    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவில்களை மத்திய அரசு எடுத்து கொள்வதாக தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். 
    மத்திய அரசின் தொல்லியல் துறை பாரம்பரிய சின்னங்களை பராமரிக்கிறது. 

    மு.க.ஸ்டாலினுக்கு தொன்மை சின்னம், பாரம்பரிய சின்னம், நினைவுச்சின்னம், கோவில்கள் இவைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அறவோர் வாரியம் அமைத்து கோவிலை பராமரிக்க வேண்டும். கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா போட்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும். 

    ரஜினி ஆன்மீக அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் கட்சியை தொடங்கி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். ரஜினியும் கமலும் இணைந்து செயல்பட்டாலும் அதை வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×