search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.33,088-க்கு விற்பனை ஆகிறது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தாக்கம் பங்குசந்தைகளையும் பாதித்தது. எனவே தங்கத்தில் முதலீடு அதிகரித்து விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன் பிறகு விலை சற்று குறைவதும், உயர்வதுமாக இருந்தது.

    நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.824 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.33,024-க்கும், ஒரு கிராம் ரூ.4,128-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.4,136-க்கும், பவுனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.33,088-க்கும் விற்பனை ஆகிறது.

    வெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.49.90-க்கும், கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.49 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆகிறது.
    Next Story
    ×