search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    சட்டசபை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

    தமிழக காங்கிரஸ் கட்சி வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. 2021 ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தல் வியூகம் வகுக்க தொடங்கி விட்டன.

    அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளன.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு அறிகிறார்கள்.

    கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டது.

    இந்த முறை கூடுதல் இடங்களை தி.மு.க.விடம் கேட்டு பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அறிகிறார்கள்.

    எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது? எந்தெந்த தொகுதிகளை கேட்டு பெறுவது என்பது குறித்தும் கருத்து கேட்கப்படுகிறது.

    ‘பூத்’ அளவில் காங்கிரஸ் கட்சியின் பணிகள் எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக கேட்டு அறிகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள், துறை தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×