search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    முருங்கைக்காய் விலை குறைந்தது- காய்கறிகள் மலிவாக கிடைக்கிறது

    கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த முருங்கைக்காய் விலை கிடுகிடு என இறங்கி விட்டது. 40 ரூபாய் வரை விற்கப்பட்ட 1 முருங்கைக்காய் இப்போது 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.
    சென்னை:

    சென்னையில் காய்கறி விலை வெகுவாக குறைந்து விட்டது.

    கடந்த மாதம் வரை உச்சத்தில் இருந்த முருங்கைக்காய் விலையும் கிடுகிடு என இறங்கி விட்டது. 40 ரூபாய் வரை விற்கப்பட்ட 1 முருங்கைக்காய் இப்போது 5 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    தேனி, மதுரை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து அதிகளவு முருங்கைக்காய் சென்னைக்கு கொண்டுவரப்படுவதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கிலோ ரூ.150 வரை விற்கப்பட்ட மாங்காய் விலையும் இப்போது 70 ரூபாய்க்கு குறைந்துவிட்டது. ஒவ்வொரு காய்கறிகளின் விலை விபரம் கிலோவுக்கு வருமாறு:-

    கத்தரிக்காய்- ரூ.15
    தக்காளி-ரூ.15
    வெங்காயம்- ரூ.30
    உருளை- ரூ.30
    கேரட்-ரூ.50
    பீன்ஸ்-ரூ.40
    சேனைக்கிழங்கு- ரூ.40
    கருணை- ரூ.40
    சவ்சவ்-ரூ.15
    முள்ளங்கி-ரூ.15
    வெண்டைக்காய் - ரு.20
    பாகற்காய்-ரூ.25
    புடலங்காய்-ரூ.20
    சுரக்காய்-ரூ.20
    கோவக்காய்-ரூ.20
    வெள்ளரிக்காய்-ரூ.20
    தர்பூசணி-ரூ.20
    மல்லிகட்டு-1-ரூ.5
    கீரை கட்டு-1 - ரூ.5

    கடந்த மாதத்தை ஒப்பிடும் வகையில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×