search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில் பாலாஜி
    X
    செந்தில் பாலாஜி

    மோசடி வழக்கில் சிறப்பு கோர்ட்டில் செந்தில் பாலாஜி ஆஜர்

    அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் இன்று செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
    சென்னை:

    2011 முதல் 2015 வரை அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் மட்டும் ஆஜராகினர். சகாய ராஜன் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு பதிவிற்காக ஒத்திவைத்தார்.
    Next Story
    ×