search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வரும் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கடை.
    X
    ஆரணியில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வரும் தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கடை.

    ஆரணியில் தி.மு.க.-அ.தி.மு.க. பிரமுகர்கள் வீடு, கடைகளில் வருமானவரி சோதனை

    ஆரணியில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர் வீடு, கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அன்வர்பாஷா, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீடு மற்றும் 3 கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    வேலூர் வருமான வரித்துறையினர் 8 பேர் கொண்ட குழுவினர் அலுவலர் பூரான்சன்பீனா தலைமையில் நேற்று மாலை ஆரணிக்கு திடீரென வந்தனர்.

    அன்வர்பாஷா வீடு மற்றும் கடைகளில் மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது. 2-வது நாளாக இன்று காலையிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    ஆரணி காந்தி ரோட்டில் நகர அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், ஆவின் துணைத் தலைவருமான பாரிபாபு என்பவரின் கடையிலும், அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த கணக்கு பதிவேட்டு புத்தகங்களை எடுத்து கொண்டனர்.

    ஆரணியில் கடந்த வாரம் பட்டுசேலை தயாரிப்பாளர்கள் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×