search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மேட்டூர் அணை நிரம்பி தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் வசதி பெறுகிறது. மேலும் அந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கர்நாடகம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட வேண்டிய காலம். இந்த காலங்களில் உச்ச நீதிமன்ற உததரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் 177 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு, கர்நாடகா வழங்க வேண்டும்.

    நடப்பாண்டில் கடந்த மாத தவணையாக 24-ந் தேதி வரை 2.06 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால் மேட்டூர் அணைக்கு 1.24 டி.எம்.சி. மதண்ணீர் மட்டுமே வந்துள்ளது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

    இதனால் கடந்த 29-ந்தேதி 114 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 185 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மாலையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 1600 கன அடியானது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1607 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 750 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதல் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 105.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் உயர்ந்து 105.17 அடியானது. இனி வரும் நட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×