search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை ரெயில்நிலையம் முன்பு த.மு.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    கோவை ரெயில்நிலையம் முன்பு த.மு.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    டெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு

    டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோவையில் போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 726 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் டெல்லியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 86 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் அன்சர் செரீப் தலைமையில் கரும்புக்கடையில் டெல்லில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 பெண்கள் உள்பட 330 பேர் கலந்து கொண்டனர்.

    இவர்கள் போலீஸ் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், இதில் கலந்து கொண்டவர்கள் மீது குனியமுத்தூர் போலீசார் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொள்ளாச்சி கண்ணப்பநகர் மீனாங்கரை ரோட்டில் டெல்லியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய ஜனநாயக கட்சி, பொள்ளாச்சி அனைத்து ஜமாத் உலமா சபையை சேர்ந்தவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் 100 பெண்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் மீது பொள்ளாச்சி மேற்கு போலீசார் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×