search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செல்லூர் ராஜூ
    X
    அமைச்சர் செல்லூர் ராஜூ

    திமுக என்றும் எதிர்க்கட்சியாகவே இருக்கும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

    திமுக என்றுமே தமிழகத்தில் எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரை மாநகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதூரில் நடந்தது. 12-வது வட்டச் செயலாளர் கே.வி.கே.கண்ணன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-


    முக ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு கண்டு வருகிறார். அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்ட யாரும் பிறக்கவில்லை. தி.மு.க. செய்த தவறை தமிழர்கள் மறக்க மாட்டார்கள்

    மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. கிராமங்கள் தோறும் ரேசன் கடைகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், 69 சதவீத இடஒதுக்கீடு என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    தற்போது அவர் வழியில் முதல்-அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.24 ஆயிரம் கோடி பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

    முதியோர் உதவித்தொகைக்காக ரூ.4,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 34 லட்சத்து 55 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை பெறுகிறார்கள்.

    மதுரையில் ரூ.1000 கோடி அளவிற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நடைபெறுகிறது, தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டு வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்து உள்ளார்,

    லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு விரைவில் பூமி பூஜை, இந்த திட்டத்தால் மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    இந்தியாவில் மிகச்சிறந்த ஆளுமை பெற்ற மாநிலம் தமிழகம். தி.மு.க. ஆட்சி காலத்தில் வக்பு வாரிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை இஸ்லாமியர்கள் எண்ணி பார்க்க வேண்டும். நோன்பு காலத்தில் 5,350 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. தி.மு.க. இஸ்லாமியர்களை பகடைகாயாக செயல்படுத்த பார்க்கிறது.

    பாராளுமன்ற தேர்தல் என்பது வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு, தி.மு.க.வால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. திமுக பணத்தை கொடுத்து வாக்குகள் வாங்க முடியாது. மக்கள் ஏமாற மாட்டார்கள். தி.மு.க. என்றுமே தமிழகத்தில் எதிர்கட்சியாக மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ராஜ்சத்யன், மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, தங்கம், திரவியம், பகுதி செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், ஜெயவேல், செந்தில்குமார், மகேந்திரன், நிர்வாகிகள் தாஸ், புதூர் அபுதாகீர், புதூர் கண்ணன், சுகந்தி அசோக், புதூர் சந்திரன், சுரேஷ், வக்கீல்கள் ஏ.பி.பாலசுப்பிரமணியன், அசோகன், இளைஞரணி நிர்வாகிகள் சோலைராஜா, பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×