search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க அன்பழகன்
    X
    க அன்பழகன்

    அன்பழகன் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதி- மு.க.ஸ்டாலின் விசாரித்தார்

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (வயது 97) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

    மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    நேற்றிரவு அன்பழகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அன்பழகனின் உடல்நலம் குறித்து டாக்டர்கள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கி கூறினார்கள்.

    அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் மருத்துவமனைக்கு சென்று அன்பழகனின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    இன்று காலையிலும் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    Next Story
    ×