search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதலன் சொரிமுத்து - தீபா
    X
    கள்ளக்காதலன் சொரிமுத்து - தீபா

    நெல்லையில் கள்ளக்காதலால் 4 வயது சிறுவனை கொலை செய்த ஊழியர்

    நெல்லை அருகே கள்ளக்காதலியின் 4 வயது சிறுவனை சுய உதவிக்குழு ஊழியர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள டானாவை சேர்ந்தவர் அந்தோணி பிரகாஷ் (வயது 29). டேங்கர் லாரி டிரைவர். இவரும், பொள்ளாச்சியை சேர்ந்த தீபா (26) என்பவரும் முகநூல் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தீபா நர்சிங் படித்துள்ளார். இவர்களுக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் இருந்தான். அந்தோணி பிரகாஷ் டேங்கர் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இதனால் தீபா தனது மகனுடன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தீபா அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை வசூலிக்க அதே பகுதியை சேர்ந்த சொரிமுத்து (30) என்பவர் தீபா வீட்டிக்கு அடிக்கடி வந்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த 20-ந்தேதி தீபா தனது மகன் யோகேஷ் மற்றும் கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோருடன் நெல்லைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் சிறுவன் யோகேஷ் கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்ததாக கூறி அவனை இருவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று யோகேஷ் பரிதாபமாக இறந்தான். சிறுவனின் தந்தை அந்தோணி பிரகாஷ் தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வந்ததும் சொரிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீபாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தாய் தீபா, கள்ளக்காதலன் சொரிமுத்து ஆகியோர் சேர்ந்து சிறுவன் யோகேசை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. தீபாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சொரிமுத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சொரிமுத்து போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து தீபா, சொரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சொரிமுத்து கூறியதாவது:-

    எனக்கு தீபாவின் மகன் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவளது கணவரின் முகம் நியாபகத்திற்கு வரும். இதனால் சிறுவன் எனது கண்ணில் படும் போதெல்லாம் அவனை அடிப்பேன். சம்பவத்தன்றும் அந்தோணி பிரகாஷ் மீது உள்ள கோபத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் போது யோகேசை அடித்தேன். பின்னர் நாங்கள் விடுதியில் இருந்தபோதும், சிறுவனை அடித்தேன். அப்போது அவன் மயங்கி விழுந்துவிட்டான். உடனே அதிர்ச்சியடைந்த நாங்கள் 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவன் இறந்துவிட்டான்.

    உடனே நாங்கள் இருவரும் அவனது மரணம் இயற்கையாக நடந்ததாக கூறி நாடகமாடினோம். ஆனால் போலீசார் நான் தான் அடித்துக்கொன்றேன் என்பதை கண்டுபிடித்து விட்டனர்.
    Next Story
    ×