search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கார் மோதி பலியான விமானப் பெண் குடும்பத்துக்கு ரூ.2.37 கோடி நஷ்டஈடு

    பெங்களூர் அருகே கார் மோதி உயிரிழந்த விமானப் பெண் குடும்பத்தினருக்கு ரூ.2.37 கோடி நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    பெங்களூரை சேர்ந்தவர் மேனகா குழுவாடி(37).தனியார் விமான நிறுவன பெண் ஊழியர்.

    2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி பெங்களூர்- பெல்லாரி சாலையில் மேனகா குழுவாடி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மேனகா குழுவாடி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவர் மாதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார்.

    மேனகாகுழுவாடி உயிர் இழந்ததால், குடும்பம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனவே, கார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5 கோடியே 85 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தீர்ப்பாயத்தை அணுகினார்கள்.

    விபத்துக்கான காரணம் என்ன? போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை விவரம், குடும்பத்தினரின் கோரிக்கை ஆகியவை குறித்து தீர்ப்பாயம் பரிசீலனை செய்தது.

    இதையடுத்து, விபத்துக்கு காரணமான காரை இன்சூரன்ஸ் செய்திருந்த நிறுவனம் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம், விபத்தில் உயிரிழந்த மேகனா குழுவாடியின் பெற்றோருக்கு தலா ரூ1.15 கோடியும், அவரது இளைய சகோதரிக்கு ரூ.7 லட்சமும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    இதன்படி, உயிரிழந்த மேனகா குழுவாடி குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.2.37 கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
    Next Story
    ×