search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரசிங்கமங்கலம் டிரான்ஸ்பார்மரில் மாலை விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    நரசிங்கமங்கலம் டிரான்ஸ்பார்மரில் மாலை விழுந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    சமயபுரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து- 53 கிராமங்கள் இருளில் மூழ்கின

    சமயபுரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 6மணி நேரம் 53 கிராமங்கள் இருளில் மூழ்கின.

    மண்ணச்சநல்லூர், பிப். 24-

    திருச்சி மாவட்டம் மண் ணச்சநல்லூர் அருகே நர சிங்கமங்கலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் மரணம டைந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஊர் வலம் முன்பு சென்ற பொது மக்கள், இளைஞர்கள் பூக்க ளையும், மாலைகளையும் தூவி சென்றனர்.

    ஒரு மாலையை மேலே தூக்கி வீசும்போது, அந்த மாலை அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந் ததில் அதில் இணைக்கப்பட் டிருந்த வயர் திடீரென அறுந்ததுடன் டிரான்ஸ்பார் மர் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பொதுமக்கள் டிரான்ஸ்பார் மரில் பற்றிய தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

    நரசிங்கமங்கலம் டிரான்ஸ் பார்முக்கு சமயபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த இணைப்பு காரணமாக சமயபுரம் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரும் வெடித்து சிதறி தீப்பொறி கள் எழுந்தன. இதைப் பார்த்த அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த மின் பணியாளர்கள் உடனே டிரான்ஸ்பார்மரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை.

    இதையடுத்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று டிரான்ஸ் பார்மரில் பற்றிய தீயை அணைத்தனர்.

    சமயபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மண் ணச்சநல்லூர், சமயபுரம், பூனாம்பாளையம், சிறுகனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தீ விபத்து காரண மாக அந்த பகுதிகளில் மின் தடை ஏற்ப டது.

    தீ விபத்து ஏற்பட்ட டிரான்ஸ்பார்மரை சீர மைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.பல மணி நேரம் போராடியும் சீரமைக்க முடியவில்லை. அமாவாசை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திரளான பக்தர் கள் குவிந்திருந்தனர். மின் தடையால் அவர்கள் அவதிக் குள்ளாகினர். ஜெனரேட்டர் மூலம் சில மணி நேரம் கோவிலில் மின் சப்ளை செய்யப்பட்ட நிலையில் அதி லும் பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் மண்ணச்சநல்லூர், சமயபுரம் பகுதியை சுற்றி யுள்ள 53 கிராம மக்கள் நேற்று மாலை முதல் இரவு வரை மின்தடையால் கடும் அவதிக்குள்ளாகினர். இதைத் தொடர்ந்து அப்பகுதி களுக்கு புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு அங்கு மின் சப்ளை கிடைத்தது.

    சமயபுரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணி இன்று நடைபெறுகிறது. அப்பணி கள் முடிவடையும் வரை புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப் பட உள்ளது. எனவே மின் மோட்டார்களை உபயோ கிக்க வேண்டாம் என்று மின் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். மேலும் இறுதி ஊர் வலத்தின்போது மாலை களை மேலேதூக்கி வீசுவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். * * * தீ விபத்து ஏற்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தையும், நரசிங்கமங்கலம் டிரான்ஸ்பார்மரில் மாலை விழுந்து கிடப்பதையும் படத்தில் காணலாம். * * * திருச்சி -01

    Next Story
    ×