search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ப்பூசணி
    X
    தர்ப்பூசணி

    கோடை காலத்துக்கு முன்பே திண்டுக்கல்லில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம்

    கோடை காலம் தொடங்கும் முன்பே திண்டுக்கல் பகுதியில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தாடிக்கொம்பு:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது வெயில் சுட்டெரித்தது. அதனைத்தொடர்ந்து பருவமழை கை கொடுத்ததால் நீர் நிலைகள் நிரம்பி குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணப்பட்டது.

    பொதுவாக திண்டுக்கல்லில் மழைப் பொழிவு குறைவாகவே உள்ளது. கடந்த சில ஆண்டு களாகவே பருவ மழை போதிய அளவு பெய்யாததால் பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி தற்போதே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. பனிப் பொழிவு குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, குளிர் பானங்கள் உள்ளிட்டவைகளை நாடிச் செல்கின்றனர். விருதுநகர் பகுதியில் இருந்து தாடிக்கொம்புக்கு தர்ப்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 4 வழிச்சாலை ஓரம் மும்முரமாக தர்ப்பூசணி விற்பனையில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 1 கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் மேலும் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் தற்போதே தர்ப்பூசணி பழங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×