search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பையில் வீசப்பட்ட தக்காளிகள்
    X
    குப்பையில் வீசப்பட்ட தக்காளிகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவால் குப்பையில் வீசிய விவசாயிகள்

    ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அதனை குப்பையில் வீசிச் சென்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சியம்மாபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காமல் குறைந்து வந்தது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60-க்கு வியாபாரிகளால் வாங்கப்பட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.2 மட்டுமே விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்தனர். தக்காளியை விற்காமல் அதனை சாலையோரம் இருந்த குப்பையில் வீசிச் சென்றனர்.

    இதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25, பல்லாரி ரூ.30-க்கு வாங்கப்படுகிறது. ரூ.15-க்கு விற்பனையான பீட்ரூட் தற்போது ரூ.2-க்கும், சுரைக்காய் ரூ.2, மர முருங்கை ரூ.50, செடி முருங்கை ரூ.60, புடலங்காய் ரூ.13, மாங்காய் ரூ35, டிஸ்கோ கத்திரி ரூ.9, ரிங் பீன்ஸ் ரூ.20, முருங்கை பீன்ஸ் ரூ.28, புல்லட் பீன்ஸ் ரூ.35 என்று அனைத்து காய்கறிகளும் விலை குறைவாக விற்பனையானது.

    கோவில் விழாக்கள் மற்றும் திருமண விசேச நிகழ்ச்சிகள் இல்லாததால் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. மேலும் ஒரே சமயத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் காய்கறிகள் வரத்து அதிகரிப்பு காரணமாகவும் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×