search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    ரூ.32 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.31,840-க்கும் விற்பனை ஆகிறது.
    சென்னை:

    சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதட்டம் காரணமாக ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. ஆனால் போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது.

    அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வருகிறது. சென்னையில் கடந்த 13-ந்தேதி தங்கம் மீண்டும் சவரனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டி ரூ.31,112-க்கு விற்பனையானது.

    தொடர்ந்து விலை உயர்ந்த நிலையில் 17-ந்தேதி சற்று குறைந்து ரூ.31,216 ஆனது. மறுநாளே விலை மீண்டும் அதிகரித்து பவுன் ரூ.31 ஆயிரத்து 408-ஆக உயர்ந்தது. நேற்று விலை மேலும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.3965, பவுன் ரூ.31,720 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

    இந்நிலையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.3,980-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ31,840-க்கும் விற்பனை ஆகிறது.

    தங்கம் விலை பவுன் ரூ.32 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 100-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ52.10-க்கு விற்பனை ஆகிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இருந்து எந்த பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை. இதனால் சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதே விலை உயர்வுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×