search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.
    X
    விபத்துக்குள்ளான காரை படத்தில் காணலாம்.

    வாசுதேவநல்லூரில் இன்று விபத்து- ஆம்னி பஸ் மோதி 3 பேர் பலி

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இன்று அதிகாலை ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சிவகிரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி சேகர் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு நேற்றிரவு ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    அப்போது கார் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் சேகர் தனது குடும்பத்தினரை அப்பகுதியில் உள்ள மற்றொரு வாடகை காரில் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் சேகரும் அவருடன் காரில் வந்த மற்றொருவரும் சேர்ந்து காரை பழுது பார்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதற்காக சிவகிரியை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மீட்பு வாகனத்தை அழைத்து வந்தனர். அவர்கள் காரை மீட்பு வாகனத்துடன் இணைத்து கொண்டிருந்தனர்.

    அப்போது சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ், பழுதாகி ரோட்டோரமாக நின்ற கார் மற்றும் காரின் அருகே நின்று கொண்டிருந்த சேகர், ராஜசேகர் உள்பட 3 பேர் மீதும் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் பஸ்சுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்தது. பலியான 3 பேரின் உடலும் ரோட்டில் சிதறி கிடந்தது. இந்த விபத்து குறித்து வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×