search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    நத்தத்தில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக திண்டுக்கல், தேனியில் தொடரும் போராட்டங்கள்

    திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
    திண்டுக்கல்:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பழனியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம்கள் இரவு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்ன பள்ளிவாசல் முன்பு கடைவீதியில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அமர்ந்தனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நத்தத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது, மாவட்ட பேச்சாளர் ஷேக்மைதீன், மாநில பேச்சாளர் சபீர் அலி மற்றும் ஏராளமான முஸ்லிம்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

    தேனி மாவட்ட இஸ்லாமியர்கள் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட இஸ்லாமியர்கள் இணைந்து பூப்பாறையில் பேரணியும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினர். இந்த பேரணியில் தேசியக் கொடியை கையில் ஏந்தி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்.

    Next Story
    ×