search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையம்
    X
    தேர்தல் ஆணையம்

    இறுதி பட்டியல் வெளியீடு- தமிழகத்தில் மொத்தம் 6.13 கோடி வாக்காளர்கள்

    தமிழக தேர்தல் ஆணையம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.13 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
    சென்னை:

    2020ஆம் ஆண்டுக்கான தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி  தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். 

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in  என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் voter helpline App டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×