search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் நிலையம்
    X
    மெட்ரோ ரெயில் நிலையம்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஒரு மாதத்தில் ஷேர் ஆட்டோ-டாக்சி, மினி வேனில் 87 ஆயிரம் பேர் பயணம்

    7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஜனவரி மாதத்தில் 87,701 பயணிகள் ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ, மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை மற்றும் டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த 11.08.2018 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக பல போக்குவரத்து இணைப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கான முன் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.

    7 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ இணைப்பு சேவைகள் ரூ.5 கட்டணத்துடன் குறிப்பிட்ட பாதையில் இயங்குகிறது. இதேபோல் ஷேர் டாக்சி சேவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் ரூ.10 கட்டணத்துடன் 3 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கப்படுகிறது.

    ஜனவரி மாதத்தில் 43,745 பயணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகளையும், 29,425 பயணிகள் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை மற்றும் 14,531 பயணிகள் டெம்போ டிராவலர் இணைப்பு சேவைகளையும் பயன்படுத்தி உள்ளனர்.

    மொத்தமாக ஜனவரி மாதத்தில் 87,701 பயணிகள் ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ, மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை மற்றும் டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    சுமார் 9 லட்சத்து 58 ஆயிரத்து 352 பயணிகள் இந்த ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ, மெட்ரோ சீருந்து இணைப்பு சேவை மற்றும் டெம்போ டிராவலர் இணைப்பு சேவைகளை 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி முதல் கடந்த ஜனவரி வரை பயன்படுத்தி உள்ளனர்.

    ஜனவரி மாதம் ஷேர் டாக்சி சேவையை அண்ணாநகர் கிழக்கு 576, கோயம்பேடு 1915, ஆலந்தூர், 1401, வடபழனி 696, திருமங்கலம் 546 பேர் என மொத்தம் 5,134 பேரும்.

    ஷேர் ஆட்டோவை கிண்டி 12069, திருமங்கலம் 6920, ஆலந்தூர் 5553, சின்னமலை 4398, ஈக்காட்டுத்தாங்கல் 4372, கோயம்பேடு 2137, பரங்கிமலை 3162 என மொத்தம் 38 ஆயிரத்து 611 பேரும் பயன்படுத்தி உள்ளனர்.

    இந்த வசதிகளுடன் கூடுதலாக கடந்த 5.8.2019 முதல் சென்னை மெட்ரோ ரெயில் செயலி வழியாக சீருந்து இணைப்பு சேவை 14 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்த இணைப்பு சேவை ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ. தூரம் வரை செயல்படும். இந்த வசதியை பயன்படுத்துவதற்கான ஒரே கட்டணம் ரூ.10 மட்டுமே

    ஜனவரி மாதம் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவையை நந்தனம் 1233 பேர், ஏஜி-டி.எம்.எஸ். 1495, ஆயிரம் விளக்கு 657, எல்.ஐ.சி. 1059, அரசினர் தோட்டம் 2213, விமான நிலையம் 14940, செனாய்நகர் 448, வண்ணாரப்பேட்டை 1723, தேனாம்பேட்டை 641, நங்கநல்லூர் சாலை 755, நேரு பூங்கா 1229, கீழ்ப்பாக்கம் 700, சைதாப்பேட்டை, 436, கிண்டி 1896 என மொத்தம் 29 ஆயிரத்து 425 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அனைத்து 32 மெட்ரோ நிலையங்களிலும் சீருந்து இணைப்பு சேவையை விரைந்து செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதேபோல் டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை சின்னமலை 1782 பேர், விமான நிலையம் 1195, ஆலந்தூர் 11554 என மொத்தம் 14 ஆயிரத்து 531 பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×