search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய நிலத்தில் பரவி உள்ள கச்சா எண்ணெய்
    X
    விவசாய நிலத்தில் பரவி உள்ள கச்சா எண்ணெய்

    ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் பரவியதால் பரபரப்பு

    திருவாரூர் அருகே உள்ள மூலங்குடியில் விவசாய நிலத்தில் பதியப்பட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதையடுத்து விவசாயியிடம் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள மூலங்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விவசாய நிலங்கள் மற்றும் ஆறுகளின் குறுக்கே குழாய்கள் பதியப்பட்டு வெள்ளக்குடியில் உள்ள கிளை நிறுவன எண்ணெய் கிடங்குகளுக்கு கச்சா எண்ணெய் அனுப்பப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மூலங்குடி எடத்தெருவை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம்(வயது 51) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பதியப்பட்ட குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் அவரது வயலில் கச்சா எண்ணெய் பரவியது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல் அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள உளுந்து பயிர்கள் கச்சா எண்ணெய் பரவியதால் சேதம் அடைந்துள்ளதாக விவசாயி பன்னீர்செல்வம் கூறினார். இதனிடையே உடைப்பு ஏற்பட்ட குழாயை ஓ.என்.ஜி.சி. பணியாளர்கள் சீரமைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயி பன்னீர்செல்வத்திடம் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×