search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்
    X
    சின்ன வெங்காயம்

    திண்டுக்கல்லில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது

    திண்டுக்கல்லில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    திண்டுக்கல்:

    சமையலில் முக்கிய பங்கு வகிப்பது சின்ன வெங்காயம் ஆகும். சாம்பார், கூட்டு, பொரியல் ஆகியவற்றுக்கு சுவை கூட்டுவது சின்ன வெங்காயம் ஆகும். எனவே இதை தவிர்த்து சமையல் செய்வது என்பது இயலாத காரியம் ஆகும்.

    அறுவடையின்போது மழை பெய்ததால் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய ஏற்றுமதி தடைபட்டது. இதனால் நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்தது. தமிழகத்திலும் கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரை விற்பனையானதால் நடுத்தர ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    இதனால் ஓட்டல்களில் ஆம்லேட் விலை அதிகரித்தது. மேலும் பிரியாணிக்கு தயிர் வெங்காயம் கொடுக்க மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்தது. சிலர் வெங்காயத்துக்கு பதிலாக முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை பயன்படுத்தி பச்சடி செய்தனர்.

    இந்த நிலையில் தற்போது சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திண்டுக்கல் மண்டிக்கு வெங்காய வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து வெங்காய வரத்து உள்ளது. இதனால் தற்போது ஒரு கிலோ ரூ.45-க்கு சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.

    பல்லாரி வெங்காயம் ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆறுதலடைந்தனர்.
    Next Story
    ×