search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    மாணவர்கள் இடைநிற்றல் கவலை அளிக்கிறது- டி.டி.வி. தினகரன்

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் இடைநிற்றல் கவலை அளிப்பதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்த வகுப்புகளில் 2015-16 கல்வி ஆண்டில் 8 சதவீதமாக இருந்த இடைநிற்றல் 2017-18-ம் கல்வி ஆண்டில் 16.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதிலும் அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018-ம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும் குறியீடாகும்.

    இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×