என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  போலீஸ் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த போலி பெண் எஸ்.ஐ. கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த போலி பெண் எஸ்.ஐ.யை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  வேலூர் மாவட்டம் ஷேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரோகிணி (30). இவர் தற்போது திருவள்ளூர் பூங்கா நகரில் வசித்து வருகிறார்.

  அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் வதட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (19). இவரிடம், “நான் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் காவல் துறையில் வேலை வாங்கித் தருகிறேன்” என்று கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.

  ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாகியும் வேலையை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பித் தரும்படி கேட்டதற்கு கொடுக்க மறுத்துள்ளார்.

  இது குறித்து பிரபு திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது ரோகிணி போலீஸ் எஸ்.ஐ. இல்லை என்பதும், ரூ.2 லட்சம் வாங்கி மோசடி செய்ததும் தெரிய வந்தது.

  இதையடுத்து போலி பெண் எஸ்.ஐ. ரோகிணியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×