search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    கொரோனா பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- துணை முதல்வர் பன்னீர்செல்வம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    போடி:

    தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது தொகுதியான போடிக்கு வந்தார். அங்குள்ள சுப்புராஜ் நகரில் உள்ள அலுவலகத்தில் தொகுதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். மனுக்கள் மீது அந்தந்த அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறியதாவது:

    கிழக்காசிய நாடான சீனாவில் வைரஸ் கொரோனா ஏற்பட்டுள் ளதால் கேரளா, தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சீனா சென்று திரும்பி வந்து உள்ளார்கள். அவர்கள் மூலம் வைரஸ் பரவி உள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

    கேரளா, தமிழ்நாட்டை இணைக்கும் போடி மெட்டு மலைப்பாதை மூலமாகவும், கம்பம்மெட்டு மலைப்பாதை மூலமாகவும் தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வர்த்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சென்று வருகிறார்கள். அவர்களுக்கும், கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க ஒருவர் ஒருவருடன் கைகுலுக்குதல், முகத்திற்கு முகம் நேராக பேசுதல், இருமல், தும்மல் வருகின்றபோது மூக்கை மூடிக் கொள்ளுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டின் எல்லையோர பகுதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழக சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×