என் மலர்

  செய்திகள்

  கொலை
  X
  கொலை

  திருநின்றவூரில் வாலிபர் வெட்டிக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருநின்றவூரில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆவடி:

  திருநின்றவூர், பெரியபாளையம் சாலை, வத்சனாபுரம் குடியிருப்பு பகுதியில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது.

  சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காணப்பட்ட இந்த வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைந்து கிடந்தன. அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதனை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

  இன்று காலை அங்கு சென்ற ஒருவர் வீட்டுக்குள் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டார்.

  இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

  அங்கு தலை உள்பட உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். சிறிது தூரத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

  கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவர் கருப்பு நிற சட்டையும், காவி நிற லுங்கியும் அணிந்திருந்தார்.

  அவர் அதே பகுதியை சேர்ந்தவரா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×