என் மலர்

  செய்திகள்

  வீடு புகுந்து கொள்ளை
  X
  வீடு புகுந்து கொள்ளை

  திருவள்ளூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (43). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார் இரவு வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

  அப்போது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து பாஸ்கரன் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×