search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    மோடிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும்- ப.சிதம்பரம் பேச்சு

    எந்த தேர்தலாக இருந்தாலும் மோடிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோவை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் வி.கே.கே. மேனன் ரோட்டில் நடந்தது.

    மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாநிலச் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் மேயர் வெங்கடாசலம், கோவை மாவட்டத் தலைவர்கள் வி.எம்.சி. மனோகரன், எம்.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அகில இந்திய காங்கிரஸ் செயலாளார் சஞ்சய் தத் சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு 31 சதவீத வாக்குகள் கிடைத்தன. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. நடவடிக்கையினால் எல்லா துறையும் பின்னுக்கு தள்ளப்பட்டது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பு. அதை எதிர்கட்சிகள் சரியாக எதிர்க்கத் தவறியதால்தான் மோடி அரசு மீண்டும் வெற்றி பெற்றது. பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதி குறைகிறது. விவசாயம் 2 சதவீதம் கூட வளர்ச்சியடைய வில்லை. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்துள்ளது. சிறிய தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

    நெசவுத் தொழில் நசிந்து போய்விட்டது. விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. ஆனால் அதையும் மீறி 2019 -ம் ஆண்டு மக்கள் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம். எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்யாததுதான். இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும் மோடி கையில் எடுத்துக் கொண்டது முத்தலாக் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, காஷ்மீர் பிரச்சனை, காஷ்மீர் மாநிலத்தின் 3 முன்னாள் முதல் மந்திரிகள் கடந்த 6 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் அதை டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டார்கள்.

    அடுத்து மோடி கையில் எடுத்தது குடியுரிமை திருத்த சட்டதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 அண்டை நாடுகளில் உள்ள 6 சமூகத்தினரான இந்து, சீக்கிய ,பவுத்தர் , ஜைனர், கிறிஸ்தவர், பார்சி ஆகியோர் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காலப் போக்கில் குடியுரிமை அளிப்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. இந்த சட்டம் சொல்வதை எதிர்க்க வில்லை. ஆனால் அந்த சட்டம் சொல்லாததைத்தான் காங்கிரஸ் எதிர்க்கிறது.

    இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். தமிழர்களில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் இருக் கிறார்களே அது மறந்து போய்விட்டதா? எனவே எந்த நாடாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் துன்புறுத் தப் பட்டால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதுதான் இந்தியாவின் பண்பு .தமிழர்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த மோடி அரசு இலங்கையை அண்டை நாடு என்று ஏற்றுக் கொள்ளாமல் குடியுரிமை தர மறுக்கிறதோ அந்த மோடி கட்சிக்கு எந்த தேர்தலாக இருந்தாலும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

    மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியு ரிமை திருத்த சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. மிகப் பெரிய கொடுமை. இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேட்ட எந்த கேள் விக்கும் உள்துறை மந்திரி பதிலளிக்கவில்லை. எனவே இந்த அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×