search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி கோர்ட்டு ரவுண்டானா அருகே போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பாலமுருகன்.
    X
    திருச்சி கோர்ட்டு ரவுண்டானா அருகே போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பாலமுருகன்.

    திருச்சியில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு நூதன தண்டனை

    குடிபோதையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய வாலிபருக்கு கோர்ட்டு நூதன தண்டனை விதித்துள்ளது.








    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 18). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் ஹெல்மெட் அணியாமல் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒரே மோட்டார் சைக்கிளில்  சென்றார்.  பாலமுருகன் மோட்டார் சைக்கிளை ஓட்ட அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர். 

    இதனைப்பார்த்த வாகன ஓட்டி ஒருவர் அதனை தனது செல்போனில் வீடி யோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டார். அந்த  வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவவே, விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. மேலும் அந்த வீடியோ காட்சியை பார்த்த திருச்சி போக்குவரத்து போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். 

    இதையடுத்து போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலமுருகனை மடக்கி பிடித்த போலீசார் அவரை திருச்சி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

    இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சுமதி நாகராஜன், இன்று 24-ந்தேதி மற்றும் நாளை 25-ந்தேதி ஆகிய 2 நாட்கள்  போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து  வாகனங்களை  ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி  கோர்ட்டு அருகே எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா அருகில் உள்ள சிக்னல் பகுதியில் இன்று போக்குவரத்து போலீசாருடன்  பாலமுருகனும் இணைந்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தினார். 

    இது பற்றி போலீசார் கூறுகையில்,திருச்சி மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ,குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டிய பாலமுருகனுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலர் அபராதம் விதித்தாலும் திரும்ப திரும்ப தவறுகளை செய்கின்றனர். அதற்காகவே இந்த நூதன தண்டனை நீதிபதி விதித்துள்ளார் என்றனர். 

    பாலமுருகன் கூறுகையில், நான் இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன். நண்பர்களின் தூண்டுதலால் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டேன். இனிமேல் போக்குவரத்து விதிகளை யார் மீறினாலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றார். 



    திருச்சி கோர்ட்டு ரவுண்டானா அருகே போலீசாருடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பாலமுருகன்.          
    Next Story
    ×