search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் மகேஸ்வரி இருளர் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கினார்
    X
    கலெக்டர் மகேஸ்வரி இருளர் குடும்பத்துக்கு சான்றிதழ் வழங்கினார்

    இருளர் வீடுகளுக்கு சென்று சாதி சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

    திருவள்ளூர் அருகே இருளர் வீடுகளுக்கு சென்று கலெக்டர் மகேஸ்வரி சாதி சான்றிதழ் வழங்கினார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் 629 பேருக்கு இருளர் வகுப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில், திருவள்ளூர் வருவாய் கோட்டத்தில் திருவள்ளூர் 324; பூந்தமல்லி 33; ஆவடி 14; ஊத்துக்கோட்டை 258 என 4 வட்டங்களைச் சேர்ந்த, 629 பேருக்கு, வீடு வீடாக சென்று, இருளர் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூரில் உள்ள வசந்தம் நகர் இருளர் காலனியில், 58 பேருக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கலெக்டர் மகேஸ்வரி, இருளர் சாதி சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் வித்தியா, வட்டாட்சியர் பாண்டியராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள் வெங்கடேசன், சுரேஷ் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×