search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் நாராயணசாமி

    ரோடியர் மில்லை மூட கவர்னர் கிரண்பேடி தான் காரணம்- நாராயணசாமி

    அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ரோடியர் மில்லை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் கவர்னர் கிரண்பேடி என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி ரோடியர் மில் விவகாரம் குறித்து தொழில்துறை அமைச்சர் ஷாஜகான், செயலாளர் சரண், ரோடியர் மில்லின் மேலாண் இயக்குனர் பிரியதர்ஷிணி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் நாராயணசாமியை எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், சாமிநாதன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். அப்போது ரோடியர் மில்லை தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

    இதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரோடியர் மில்லை மூட நாங்கள் உத்தரவிடவில்லை. மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கத்தான் கவர்னருக்கு கோப்பு அனுப்பினோம். ஆனால் அவர் அதை திருப்பி அனுப்பிவிட்டார். அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மில்லை மூடுவதற்கு காரணமாக இருந்தவர் கவர்னர் கிரண்பேடி. ஏற்கனவே மில் தொடர்பான பிரச்சினை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுப்பதுதான் அரசின் எண்ணம். மில்லை மூட உத்தரவு போட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மில்லை மூடவும் அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். 
    Next Story
    ×