search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் போராட்டம்- மு.க.ஸ்டாலின்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் 28-ந்தேதி மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் இடையே எழுந்துள்ள கொந்தளிப்பை பற்றி கவலைப்படாமல் மத்திய பா.ஜனதா அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

    காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனம் ஆக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் துரோகமாக தி.மு.க. இதனை கருதுகிறது.

    ஹைட்ரோ கார்பன் திட்டம்

    விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க கோரி ஜனவரி 28 (செவ்வாய்க்கிழமை) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×