search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் ஆஜராக வேண்டும்- திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

    பழவேற்காடு ஏரிக்கு தண்ணீர் வராதது குறித்து 5-ந்தேக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆண்டு குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் உஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கில் பழவேற்காடு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளதாகவும் இதில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.

    மீனவர்கள் அங்கு உள்ள முகத்துவாரத்தின் வழியாக வரக்கூடிய ஏரி மூலம் இறால் நண்டு பிடிப்பதை தொழிலாக கொண்டு வருவதாகவும் இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அந்த முகத்துவாரம் அடைக்கப்பட்டு அந்த ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த முகத்துவாரத்தை சரிசெய்து வழக்கம்போல் ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி நீதிபதி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகத்துவாரம் அடைக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தற்போது தனியார் நிறுவனமொன்று துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுப்பதன் காரணமாக அப்பகுதி மீனவர்களை காலி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறித்து வருகிற 5-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், அறிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×