search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக்
    X
    கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக்

    பயங்கரவாதிகளின் துப்பாக்கியை தேடி வருகிறோம் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளின் துப்பாக்கியை தேடி வருகிறோம் என்று விசாரணை அதிகாரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறினார்.
    சப்-இன்ஸ்பெக்டர் கொலை தொடர்பாக விசாரணை அதிகாரி எஸ்.பி. ஸ்ரீநாத் கூறியதாவது:-

    அப்துல் சமீம், தவுபீக் இருவரும் வைத்திருந்த பையில் துப்பாக்கி மட்டுமே இருந்ததாக கூறினர். துப்பாக்கியை எடுத்து விட்டு பையை குப்பையில் போட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கியை இன்னும் கைப்பற்றவில்லை. தேடி வருகிறோம்.

    இருவருக்கும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டோம். நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே எஸ்.ஐ.யை கொன்றதாக தெரிவித்தனர்.

    குமரி மாவட்டத்தில் எஸ்.ஐ.யை கொன்றது ஏன்? என்ற கேள்விக்கு இந்த மாவட்டம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். இங்குள்ள மொழியை நாங்கள் சரளமாக பேசுவோம் என்பதால் எங்களை எளிதில் கண்டு பிடிக்க முடியாது, தப்பிச் சென்று விடலாம் என்று நினைத்தோம் என கூறினர்.

    எனவே 15 நாள் போலீஸ் காவல் வேண்டும் என்று கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 20-ந்தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது இருவரையும் காவலில் எடுத்து இன்னும் பல வி‌ஷயங்களை அவர்களிடமிருந்து பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×