search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்
    X
    திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்

    காணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்

    காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டி படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
    கோவை:

    காணும் பொங்கலை முன்னிட்டு ஊட்டியில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    கோவையில் வ.உ.சி. பூங்கா, மருதமலை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். வ.உ.சி. பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் ஆனந்தமாக விளையாடி மகிழ்ந்தனர். கோவை குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழப்பண்ணை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்கா, டாப்சிலிப் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து இருந்தனர். குரங்கு நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.

    கோவையில் உள்ள வணிக வளாகங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் காணும் பொங்கலை யொட்டி இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினார்கள்.



    Next Story
    ×