என் மலர்

  செய்திகள்

  நீலகிரியில் தொடர் உறை பனியால் தேயிலை செடிகள் கொப்புள நோயால் பாதிக்கப்பட்டள்ளது.
  X
  நீலகிரியில் தொடர் உறை பனியால் தேயிலை செடிகள் கொப்புள நோயால் பாதிக்கப்பட்டள்ளது.

  தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கியது- விவசாயிகள் கவலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரியில் தொடர் உறைபனி எதிரொலி காரணமாக தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

  ஊட்டி:

  நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தீவிரமாகி வருகிறது.நேற்று ஊட்டி புகர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனல் 5 டிகிரி செல்சியசாகவும் குறைந்துள்ளது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

  பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, மலர்ச்செடி மற்றும் காய்கறிச்செடிகளை அடர்ந்த பனி படர்ந்துள்ளதால் நோய் தாக்கி வருகிறது.

  நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பருவமழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.

  இந்நிலையில் பனிப்பொழிவால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் கொழுந்துகள், இலைகள் சுருண்டு நிறம் மாறி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மானிய விலையில் அரசு மருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

  கடந்த 2 நாட்களாக புகர் பகுதியில் 5 டிகிரி செல்சியசாகவும், குன்னூர் பகுதியில் 0 டிகிரி செல்சியசாகவும் வெப்ப நிலை பதிவானது. இன்று அதிக பட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.

  Next Story
  ×