search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் கொடுத்து மனைவியை தீர்த்துக் கட்டினேன் - கைதான கணவர் வாக்குமூலம்

    சொத்துக்களை எழுதித்தர மறுத்ததால் கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் கொடுத்து மனைவியை தீர்த்துக் கட்டியதாக கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    மதுரை:

    தல்லாகுளம் பெண் கொலையில் கணவரே கூலிப்படையை ஏவி கொன்ற விவரம் அம்பல மாகி உள்ளது.

    மதுரை ரேஸ்கோர்ஸ் ரோடு பாரதி உலா வீதியைச் சேர்ந்த குமரகுரு மனைவி லாவண்யா (வயது 33). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து வெட்டிக் கொன்றது.

    அப்போது மாமியார் சீனியம்மாளுக்கும், அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தல்லாகுளம் போலீசார் லாவண்யா படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது குமரகுரு வீட்டின் கதவு நள்ளிரவில் திறந்து வைக்கப்பட்டது. வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்கள் ‘ஆப்’ செய்யப்பட்டது ஆகி யவை போலீசாருக்கு சந்தே கத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீ சார் குமரகுருவிடம் துருவி, துருவி விசாரணை செய் தனர்.

    அப்போது நான் தான் கூலிப்படையை ஏவி என் மனைவியை கொன்றேன் என்று ஒப்புக் கொண்டார். இதனையடுத்து குமரகுரு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் மதுரை லட்சுமி புரத்தில் பாத்திரக்கடை நடத்தி வருகிறேன். எனக்கு ஆடம்பரமாக வாழ்வது மிகவும் பிடிக்கும் என்பதால் பணத்தை தண்ணீராக செலவு செய்தேன்.

    இது என் தந்தைக்கு (மாரியப்பன்) பிடிக்க வில்லை. எனவே சொத்தில் ஒரு பகுதியை எனது மனைவி லாவண்யா பெய ரில் எழுதி வைத்தார்.

    பின்னர் இறந்து விட்டார். அப்போது முதலே எனக்கு லாவண்யாவிடம் பகை உருவானது. அவரின் பெயரில் இருக்கும் சொத்து மற்றும் பணத்தை எனக்கு மாற்றி கேட்டேன். இதற்கு அவர் மறுத்து விட்டார்.

    எனவே அவரை எப்படி யாவது கொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த வி‌ஷயத்தை என் கடையில் வேலை பார்க்கும் மேலூ ரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியனிடம் தெரிவித்தேன். அவர் அதே பகுதி யில் வசிக்கும் சகோதரர்கள் மூக்கன் (வயது 22), சூர்யா (21) ஆகிய 2 பேரை துணைக்கு சேர்த்துக் கொண்டார்.

    இதனையடுத்து லாவண் யாவை கொலை செய்வது எப்படி? என்று திட்டம் தீட்டினோம். அப்போது திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கொலை திட்டத்தை அரங் கேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக நான் கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டேன். இந்த நிலை யில் நான் லாவண்யாவை சின்னாளப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்து சென்றேன். அப்போது கூலிப்படை வெட்டியதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இருந்த போதிலும் லாவண்யா அதிர்ஷ்ட வசமாக தப்பி விட்டார்.

    அப்போது லாவண்யா என்னிடம் போலீசில் புகார் கொடுக்க வற்புறுத்தினார். இருந்த போதிலும் நான் எப்படியோ சமாளித்து விட்டேன்.

    அடுத்த நாள் கூலிப்படையிடம் பேசியபோது, “பொது இடத்தில் பெண் ஒருவரை கொலை செய்வது சாதாரணமான வி‌ஷயம் அல்ல” என்று தெரிவித் தனர்.

    இதையடுத்து லாவண் யாவை வீட்டில் வைத்து படுகொலை செய்வது என்று முடிவு எடுத்தோம். இதற்காக கூலிப்படைக்கு ரூ.11 லட்சம் பேரம் பேசி, முன் பணமாக ஒரு லட்சம் ரூபாயை கொடுத்தேன்.

    அவர்கள் படுகொலை திட்டத்தை கச்சிதமாக அரங்கேற்றி விட்டனர். இருந்த போதிலும் கிடுக் கிப்பிடி விசாரணையில் சிக்கிக் கொண்டேன்” என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதனையடுத்து தல்லா குளம் போலீசார் லாவண் யாவை கூலிப்படை மூலம் படுகொலை செய்ததாக குமரகுரு மற்றும் மேலூர் அலெக்ஸ் பாண் டியன் (32), சூர்யா (21), மூக்கன் (22) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×