search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா தேர்வு

    நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா மட்டும் போட்டியிட்டதால் போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தல் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மலர்விழி தமைமையில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சாரதா மட்டும் போட்டியிட்டதால் போட்டியின்றி அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை மாவட்ட கலெக்டர் மெகராஜ் முறையாக அறிவித்தார். தேர்தலில் 17 உறுப்பினர்களில் 12 பேர் மட்டுமே பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பள்ளிபாளையம் 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் பங்கேற்கவில்லை.

    ஊராட்சி குழு உறுப்பினராக வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த மல்லசமுத்திரம் அருள்செல்வி, ராசிபுரம் ராஜேந்திரன், சேந்தமங்கலத்தை சேர்ந்த ராஜாத்தி, எருமப்பட்டியைச் சேர்ந்த தவமணி ஆகியோர் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:-

    எலச்சிபாளையம் ஜெயசுதா (அ.தி.மு.க) , எருமப்பட்டி வரதராஜன் (அ.தி.மு.க) , கபிலர்மலை ஜே.பி.ரவி (அதிமுக) , நாமக்கல் சுமதி (அ.தி.மு.க) , பள்ளிபாளையம் தனலட்சுமி (அ.தி.மு.க) , சேந்தமங்கலம் மணிமாலா(தி.மு.க.), வெண்ணந்தூர் தங்கம்மாள் (அ.தி.மு.க).
    Next Story
    ×