search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சல்
    X
    டெங்கு காய்ச்சல்

    டெங்கு காய்ச்சலுக்கு புதுவை மாணவி பலி

    டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை கணேஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் சொக்கநாதன். இவரது 2-வது மகள் ரம்யா (வயது13). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    இதற்காக அவர் கடந்த 5-ந் தேதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் ரம்யாவுக்கு மூளைக்காய்ச்சல் மற்றும் டெங்கு அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று ரம்யா உயிரிழந்தார்.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வாசுதேவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    புதுவை மற்றும் தமிழக பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவி ரம்யா டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    புதுவை அரசு மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு அறிகுறியுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×