search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்கள்
    X
    சிறப்பு ரெயில்கள்

    பொங்கல் சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    மதுரை:

    மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்னை-நெல்லை இடையே பொங்கல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை (10-ந்தேதி) இரவு 6.50 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82601) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:06002) மறு நாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து 12-ந்தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 82603) மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து 18-ந்தேதி இரவு 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82604) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    இது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    நாகர்கோவிலில் இருந்து 19-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 82606) மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    தாம்பரத்தில் இருந்து 20-ந்தேதி காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06075) மறு நாள் அதிகாலை 2 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

    இது வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×