search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறுவடைக்கு தயாராக உள்ள செங்கரும்புகள்.
    X
    அறுவடைக்கு தயாராக உள்ள செங்கரும்புகள்.

    தருமபுரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான செங்கரும்புகள்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் செங்கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
    தர்மபுரி:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், சேலம், தருமபுரி, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், 10 ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிபட்டி  உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பொங்கலுக்காக செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கரும்புக்கு லாபகரமான விலை கிடைக்காததால், இந்த ஆண்டு, பொங்கல் பண்டிக்கைக்காக விவசாயிகள் ஆர்வத்துடன், கரும்பை சாகுபடி செய்ய முன்வரவில்லை. இருப்பினும், ஒரு சில விவசாயிகள் மட்டுமே கரும்பை சாகுபடி செய்தனர். ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால், 7 அடி உயரம் வரக்கூடிய கரும்பு போதிய வளர்ச்சி இல்லாமல், 4 அடி வரையே வளர்ந்துள்ளது. அதுவும் சரியான வளர்ச்சி இல்லை. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் செங்கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது. அதனால் போதிய மழை இல்லாததால், கரும்பு சாகுபடி செய்த செலவாவது கிடைக்குமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் கருப்பு இல்லாததால், பொங்கலை எதிர்நோக்கி வியாபாரிகள் கரும்பை வாங்க முட்டி மோதுவதால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கரும்பின் விலை அதிகரிப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  ஆனால் கடந்த ஆண்டு  ஒரு கரும்பு, 20 ரூபாய்  முதல் 30 வரை விற்ற நிலையில், தற்போது விளைச்சல் குறைவால், ஒரு கரும்பின் விலை 50 முதல் 70 வரை விற்க வாய்ப்பு உள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் போதிய அளவில் செங்கரும்பு விளைச்சல் இல்லாததால், வெளியில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் செங்கரும்பின் விலை மென்மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு விலை உயர்வால் தற்போது வியாபாரிகள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எப்படியாவது பொங்கலுக்கு விற்றாக வேண்டும் என்பதற்காக, விவசாயிகளிடம் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு கேட்பதாக, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆனால் தங்களிடம் குறைவாக வாங்கி சென்று, கரும்பின் மீது ரூ.100வரை லாபம் பார்ப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பொங்கல் பரிசுக்காக, தருமபுரி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்தால் போதிய வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஆண்டு செங்கரும்பு வாங்கி பொங்கல் வைக்க முடியுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு பொங்களில் இனித்த கரும்பு இந்த ஆண்டு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கசப்பை ஏற்படுத்தும் சூழலே நிலவி வருகிறது.
    Next Story
    ×