search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)
    X
    மெட்ரோ ரெயில் (கோப்புப்படம்)

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் பொங்கல் கலைவிழா

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் பொங்கல் கலைவிழா இந்த ஆண்டு ஜனவரி 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் பொங்கல் கலைவிழா இந்த ஆண்டு ஜனவரி 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்துடன் இணைந்து தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு சைதாப்பேட்டை, சென்ட்ரல் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி வியாழக்கிழமை சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 5.45 மணிக்கு கேரள மாநிலம் பையனூரைச் சேர்ந்த சிகாபுதீன் குழுவினரின் திருபாதிரைக்களி மற்றும் ஒப்பனா நடனம் கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றன.

    அன்று இரவு 7.15 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம் குழுவினரின் தப்பாட்டம் நடைபெறுகிறது.

    10-ந்தேதி வெள்ளிக்கிழமை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 5.45 மணிக்கு கேரள மாநிலம் பையனூரை சேர்ந்த சிகாபுதீன் குழுவினரின் திருவாதிரைக்களி மற்றும் ஒப்பனா நடன நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த பூதியப்பா குழுவினரின் டோலுகுனிதா துள்ளிசை நடன நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அன்று இரவு 7.15 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம் குழுவினரின் தப்பாட்டம் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ந்தேதி சனிக்கிழமை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 5.45 மணிக்கு கேரள மாநிலம் பையனூரைச் சேர்ந்த சிகாபுதீன் குழுவினரின் திருபாதிரைக்களி மற்றும் ஒப்பனா நடனம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த பூதியப்பா குழுவினரின் டோலுகுனிதா துள்ளிசை நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 7.15 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம் குழுவினரின் தப்பாட்டம் நடைபெறுகிறது.

    3 நாட்கள் பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் கண்டு மகிழ சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனுமதி இலவசம். எனவே மெட்ரோ ரெயில் பயணியர், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×