search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கண்ணன்
    X
    நெல்லை கண்ணன்

    நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி நசீர் அகமது வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
    நெல்லை:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கடந்த 29-ந்தேதி நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து அவதூறாக கூறினார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர் கடந்த 3-ந்தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது சில காரணங்களுக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் கேட்டு மனு அளித்தார்.

    நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் சிவமுத்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தார்.

    மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதையடுத்து நீதிபதி நசீர் அகமது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×