என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Byமாலை மலர்6 Jan 2020 4:23 AM GMT (Updated: 6 Jan 2020 4:23 AM GMT)
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.
சென்னை:
இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே டிசம்பர் மாதம் 31-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று, 6-ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாக தேர்வு முகமை அறிவித்துள்ளது.
Next Story
×