search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.
    X
    சென்னையில் இன்று காலை பனிமூட்டம் காணப்பட்டது.

    சென்னையில் 2-வது நாளாக பனி மூட்டம்: விமான சேவை இன்றும் பாதிப்பு

    சென்னையில் இன்று காலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது. பனி மூட்டம் காரணமாக இன்று 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு ஏற்பட்டது.

    சென்னை, ஜன. 4-

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே பனிப் பொழிவு காணப்படுகிறது. நேற்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. 500 மீட்டர் தொலைவில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னையில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. காலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் நேற்று பனி சூழ்ந்து இருந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

    இந்த நிலையில் பனி மூட்டம் காரணமாக இன்று 2-வது நாளாக விமான சேவை பாதிப்பு ஏற்பட்டது. விமான ஓடு பாதையில் பனி மூட்டம் இருந்ததால் விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    இன்று காலை 5.30 மணிக்கு சென்னை வர வேண்டிய மஸ்கட் விமானம், 5.55 மணிக்கு வரும் டெல்லி விமானம், 6 மணிக்கு வரும் மஸ்கட் விமானம், 7 மணிக்கு வர வேண்டிய 5 விமானங் கள். ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

    சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொழும்பு உள்பட பல்வேறு இடங் களுக்கு செல்லும் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டு சென் றன. காலை 9 மணிக்கு பிறகு விமான சேவை வழக்கம் போல் நடைபெற்றது.

    இந்த தாமதம் காரண மாக விமான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார் கள்.

    பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×